• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சந்திரபாபு நாயுடு மீது கல்வீசி தாக்குதல்

ByA.Tamilselvan

Nov 5, 2022

ஆந்திர மாநில முன்னாள் முதல்-அமைச்சரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று இரவு என்.டி.ஆர் மாவட்டம், நந்தி கிராமம் அடுத்த ஜக்கைய்யா பேட்டை பகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் விலைவாசி உயர்வு குறித்து திறந்த வேனில் பிரசாரம் செய்தபடி ரோடு ஷோ நடத்தினார். அவருடன் சீனிவாஸ் எம்.பி, எம்.எல்.சி சத்திய நாராயண ராஜு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சவுமியா ஸ்ரீராம் தாத்தையா ஆகியோர் உடன் சென்றனர்.
அப்போது அங்குள்ள வீட்டின் மாடியில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டது. இதனைக் கண்ட அவரது பாதுகாவலர்கள் சந்திரபாபு நாயுடுவின் மீது கல் படாமல் தடுத்தனர். அப்போது மர்ம நபர்கள் வீசிய கற்கள் பாதுகாவலர் முகத்தில் பட்டு ரத்தம் கொட்டியது.இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.