• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கழுத்தைப் பிடிக்கும் கேஸ் விலை உயர்வு!..

Byமதி

Oct 6, 2021

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 900 என விற்கப்பட்டு வந்த நிலையில், ரூ.15.50 உயர்ந்து தற்போது ரூ. 915.50 என்றாகியுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை, கடந்த ஆகஸ்ட் 17 -ம் தேதி, 25 ரூபாய் உயர்த்தப்பட்டது, அதன்பின் செப்.1 ம் தேதி, 25 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ 900- ஐ கடந்தது. இப்படி இந்த ஓராண்டில் மட்டும் 285 ரூபாய் கேஸ் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது இன்னும் 15 ரூபாய் உயர்ந்து, ரூ.915 என்றாகியுள்ளது.

எனவே, கடந்த ஓராண்டில் சிலிண்டர் விலை ரூ.300 உயர்ந்துள்ளது.