• Sun. Apr 28th, 2024

டி20 உலககோப்பை – ஜிம்பாப்வே வெளியேறியது

டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து ஜிம்பாப்வே அணி வெளியேறியது. அடிலெய்ட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி, நெதர்லாந்து அணியுடன் மோதியது.
பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்வே அணி, வங்கதேசத்திடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இன்று ஜிம்பாப்வே நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நெதர்லாந்து அணியின் வேகப்பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.
ஜிம்பாப்வே வீரர் வெய்ஸ்லி 1 ரன்னிலும், கேப்டன் ர்வின் 3 ரன்களிலும், சஙகபவா 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி 20 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் சென் வில்லியம்ஸ் 28 ரன்கள் எடுத்தார். எனினும் தனி ஆளாக நின்று போராடிய சிக்கந்தர் ராசா 24 பந்தில் 40 ரன்கள் விளாசினார்.
இதில் 3 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அணி 19.2 வது ஓவரில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.
தொடக்க வீரர் ஸ்டிபன் 8 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் மேக்ஸ் அபாரமாக விளையாடி அரைசதம் விளாசினார், அவருக்கு துணையாக கூப்பர் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். எனினும் பேஸ் டி வீட் 12 ரன்கள் எடுத்து 2 ஓவர்கள் எஞ்சிய நிலையில் நெதர்லாந்து அணியின் வெற்றியை உறுதிய செய்தார்.
இதன் மூலம் பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்வே அணி வங்கதேசம் மற்றும் நெதர்லாந்திடம் வீழ்ந்தது. தற்போது 3 புள்ளிகளுடன் 3 வது இடத்தில் இருந்தாலும், அந்த அணி தொடரிலிருந்து வெளியேறுவது 99.9 சதவீதட்ம உறுதியாகிவிட்டது. தற்போது பாகிஸ்தான், இந்தியா அணிகளுக்கு இடையே மட்டும் போட்டி நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *