• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படம்… கெஜ்ரிவால் வேண்டுகோள்

ByA.Tamilselvan

Oct 26, 2022

கரன்சி நோட்டுகளில் நேதாஜி படம் இடம்பெற செய்ய வேண்டும் என இந்து மகாசபை வலியுறுத்தி . வரும்நிலையில் டெல்லி முதல்வர் கேஜிரிவால் லட்சுமி,விநாயகர் படம் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது.. , இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் இந்து கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரது உருவங்களை இடம்பெற செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து அவர் கூறும்போது, ‘நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசி இல்லையென்றால் சில சமயங்களில் நம்முடைய அந்த முயற்சிக்கு பலன் இருக்காது. அதனால், புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி உருவமும், மற்றொரு புறம் பெண் கடவுள் லட்சுமி மற்றும் கடவுள் விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும். இரு தெய்வங்களின் உருவங்கள் ரூபாய் நோட்டுகளில் இருப்பது, நாட்டை வளம்பெற செய்ய உதவும். இதனால், நாட்டின் பொருளாதார சூழ்நிலை மேம்படும். ஒட்டுமொத்த நாடும் ஆசிகளை பெறும். இதுபற்றி நாளை அல்லது நாளை மறுநாள் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்’ என்றார். இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் கரன்சியில் விநாயகர் படம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் செய்ய முடியும்போது நம்மால் முடியாதா? என்றும் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.