• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சாட்டையால் அடிவாங்கிய முதலமைச்சர்!!

ByA.Tamilselvan

Oct 26, 2022

சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ்பாகல் பூசாரியிடம் சாட்டையால் அடிவாங்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கோயிலில் கோ பூஜை நடைபெறும் போது பக்தர்கள், பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கினால் துன்பங்கள் நீங்கும் என நம்பிக்கை உள்ளது. இந்த கோயிலுக்குச் சென்ற முதலமைச்சர் பூபேஷ் பாகல், தனது கையை நீட்டி பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கினார். முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஒவ்வொரு ஆண்டும் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தூர்க் மாவட்டத்தின் ஜன்கிரி என்ற கிராமத்தில் கோவர்த்தன பூஜையில் கலந்து கொள்வது வழக்கம். இந்த பூஜையின் ஒரு நிகழ்ச்சியாக நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை சவுக்கால் அடிக்கும் வழக்கம் உள்ளது.
அப்படி சவுக்கால் அடி வாங்கினால் உடல் மற்றும் மனதில் உள்ள பிரச்சனைகள் நீங்கி நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ்பாகில் கலந்து கொண்டார் சுவாமி தரிசனத்திற்கு பிறகு தனது கையை நீட்டி சவுக்கால் அடி வாங்கினார். முதல்வர் ஐந்து அடிகளுக்கு மேல் அவர் வாங்கிய நிலையில் அருகில் இருந்தோர் அவரை உற்சாகப்படுத்தினர். தற்போது இந்த வீடியோவை அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.