• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ByA.Tamilselvan

Oct 25, 2022

திண்டுக்கல் ,மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்….திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். 27-ந்தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். 29-ந்தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.