• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான ரேட்டிங்- ஆர்மேக்ஸ் நிறுவனம் வெளியீடு

ByA.Tamilselvan

Oct 17, 2022

ஆர்மேக்ஸ் நிறுவனம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான முதல் ஐந்து இடங்களுக்கான ரேட்டிங்கை வெளியிட்டுள்ளது
பிக் பாஸ் ஆறாம் சீசன் கடந்த ஞாயிறு அன்று மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன் இந்தசீசனையும் தொகுத்து வழங்குகிறார். 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் உள்ளனர். இதில் ஜி.பி.முத்து பலரின் கவனத்தை கவர்ந்து வருகிறார்.படு மாஸாக பிக்பாஸ் 6வது சீசன் ஓடிக் கொண்டிருக்கிறது.

20 போட்டியாளர்களில் ஜெயிக்கப்போவது யார் என்பது தெரியவில்லை . தற்போது ஷோ முதல் வாரத்திலேயே ஜெட் வேகத்தில் பறக்க தொடங்கி இருக்கிறது.தற்போது பிக் பாஸ் 6ல் அதிகம் பிரபலமாக இருக்கும் போட்டியாளர்களுக்கான ரேட்டிங்கை ormax நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
அதில் ஜிபி முத்து தான் முதலிடம் பிடித்து இருக்கிறார். இரண்டாம் இடத்தில் ரச்சிதா மஹாலக்ஷ்மி இருக்கிறார். இலங்கைப்பெண் ஜனனியும் முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார்.