• Sat. Apr 27th, 2024

பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

ByA.Tamilselvan

Oct 13, 2022

உக்ரைன் போர் சூழலுடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்து பேசிய பாக்ஸ்தான் தூதருக்கு இந்தியா கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது.
ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பேசிய பாகிஸ்தான் தூதர், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். உக்ரைன் போர் சூழலுடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்து பேசினார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் கூறும்போது, “இந்தியாவுக்கு எதிராக அர்த்தமற்ற விஷயங்களை குறிப்பிட்டு ஐ.நா. அமைப்பை மீண்டும் ஒருமுறை தவறாக பயன்படுத்த வெளிநாட்டு குழு ஒன்று முயற்சித்து உள்ளது. தொடர்ந்து பொய்களை கூறும் மனபாங்குடன் இதுபோன்ற பேச்சுக்கள் உள்ளன. இது எந்த மதிப்புக்கும் உரியவை அல்ல. ஜம்மு-காஷ்மீர் எப்போதும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானை கேட்டு கொள்கிறோம். இதனால் எங்கள் குடிமக்கள் தங்களது வாழ்வுரிமை மற்றும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *