• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வருத்தம் தெரிவித்த அமைச்சர் பொன்முடி

ByA.Tamilselvan

Oct 13, 2022

அமைச்சர் பொன்முடி “ஓசி பஸ்சில் போறீங்க’ என பேசிய அவரது பேச்சு வருத்தம் தெரிவித்தார்.சென்னை அம்பத்தூரில் கடந்த மாதம் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, அரசு பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வது தொடர்பாக சில கருத்துக்களை பேசினார். `இப்போ பஸ்சில் எப்படி போறீங்க… ஆ… இங்கிருந்து கோயம்பேடு போக வேண்டும் என்றாலும் இங்கிருந்து எங்கே போக வேண்டுமானாலும் எல்லாம் ஓசி பஸ்சில் போறீங்க’ என்று பெண்களை பார்த்து பேசி இருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது. அவரது பேச்சு அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் அளவுக்கு சென்றுவிட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டதுடன் தி.மு.க. பொதுக்குழுவிலும் வேதனைப்பட்டு பேசினார். இந்த சூழலில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். யாராவது மனதும் புண்பட்டு இருக்குமானால் உண்மையாகவே நான் வருந்துகிறேன். நான் யாரையும் புண்படுத்த வேண்டும் என்று பேசவில்லை. அது கலோக்கியலாக பேசுகிற ஒரு வார்த்தை தான். இவ்வாறு பொன்முடி கூறினார்.