• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

மால் ஆற்றங்கரையில் வெள்ளம்.. துர்கா பூஜையில் சோகம்!!

Byகாயத்ரி

Oct 6, 2022

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியிலுள்ள மால் ஆற்றங்கரையில் நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற துர்கா பூஜையில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்று வழிபட்டனர். அப்போது திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏராளமான மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். மீட்புக்குழுவினர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்பைகுரி மாவட்ட மாஜிஸ்திரேட் மௌமிதா கோதாரா அளித்த தகவலின் படி, மீட்கப்பட்ட 50 பேர்களில் 7 பேர் உயிரிழந்ததாகவும் சிலபேருக்கு காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மீட்புக்குகுவினர், மக்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.