• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சீன செல்போன் நிறுவனத்தின் ரூ.5,551 கோடி பறிமுதல்

ByA.Tamilselvan

Oct 1, 2022

சீன செல்போன் நிறுவனத்தின் டெபாசிட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. சீனாவை சேர்ந்த செல்போன் உற்பத்தி நிறுவனம், சியோமி குழுமம். அதன் இந்திய கிளையான சியோமி இந்தியா, நாட்டில் ‘ரெட்மி’ என்ற பெயரிலான செல்போன்களை வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.5 ஆயிரத்து 551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. கடந்த ஏப்ரல் 29-ந் தேதி இதற்கான உத்தரவை பிறப்பித்தது. அனுமதியின்றி ரூ.5 ஆயிரத்து 551 கோடிக்கு சமமான அன்னிய செலாவணியை இந்தியாவுக்கு வெளியே சியோமி நிறுவனம் அனுப்பி, அங்கேயே வைத்திருப்பது ‘பெமா’ சட்டத்தின் 4-வது பிரிவை மீறிய செயல் என்று அமலாக்கத்துறை கூறியது சரிதான் என்று உயர் அதிகாரி கூறியுள்ளார். . இந்தியாவில் இதுவரை அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தொகைகளில் இதுதான் மிகப்பெரிய தொகை ஆகும்.