• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு..

Byகாயத்ரி

Oct 1, 2022

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் மெய்யநாதன் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு கடந்த சில மணி நேரங்களாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் மெய்யநாதன் சென்னைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தனி கார் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் மெய்யநாதன் சென்னை வந்தவுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.