• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கொரிய ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடி கலக்கல்

ByA.Tamilselvan

Sep 30, 2022

கொரிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலி றுதி வரை முன்னேறி இந்திய ஜோடி சாதனை.ஆசியாவின் பிரபல சர்வதேச டென்னிஸ் தொடரான கொரிய ஓபன் டென்னிஸ் தொடர் தற் போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் இரட்டையர் பிரி வில் யாரும் எதிர்பாராத வகையில் காலி றுதி வரை முன்னேறியது இந்தியாவின் யுகி பாம்பரி – சாகேத் மைனேனி ஜோடி. வியாழனன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அதிரடிக்கு பெயர் பெற்ற ரோட்ரிக்ஸ் (கொலம்பியா) – டியா கோ (ஈகுவடார்) ஜோடியை, தரவரிசை இல்லாமல் களமிறங்கிய யுகி பாம்பரி – சாகேத் மைனேனி ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை யிறுதிக்கு முன்னேறியது. லியாண்டர் பயஸ் – மகேஷ் பூபதி ஜோடியை போன்று திடமான வீரர்கள் இல்லாமல் கடந்த 10 வருடங்களாக இந்திய டென்னிஸ் உலகம் திணறி வரும் நிலையில், அவர்களது இடத்தை யுகி பாம்பரி – சாகேத் மைனேனி பிடிப் பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.