• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சாண்ட்விச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ByA.Tamilselvan

Sep 29, 2022

சாண்ட்விச் தீவில் இன்று காலை 8.33 மணியளவில் 7.0 என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தெற்கு சாண்ட்விச் தீவு அமைந்து உள்ளது. இந்த தீவில், இன்று (செப்.29-ம் தேதி) காலை 8.33 மணியளவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது, ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஜார்ஜியா தீவில் இருந்து 470 மைல் தொலைவில் இந்த தீவு அமைந்து உள்ளது. எனினும் நிலநடுக்கம் தொடர்ச்சியாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்களும் உடனடியாக வெளியாகவில்லை.