• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியல்- அமைச்சர் வெளியிட்டார்

ByA.Tamilselvan

Sep 28, 2022

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 2022-2023-ம் ஆண்டிற்கான மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் தேசிய வாரிய பட்ட படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது .. மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டன. இவை அனைத்திற்கான கலந்தாய்வு இணையதள வாயிலாக நடைபெறும். கலந்தாய்வு அட்டவணை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு, மேற்படிப்புகளுக்கான அரசு கல்லூரிகளில் 1162 இடங்களும், மருத்துவ பட்ட, பட்டய, மேற்படிப்புகளுக்கான நிர்வாக கல்லூரிகளில் 763 இடங்களும், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான அரசு கல்லூரிகளில் 31 இடங்களும், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான சுயநிதி கல்லூரிகளில் 296 இடங்களும், தேசிய வாரிய பட்டபடிப்பு இடங்கள் 94 ஆக மொத்தம் 2,346 இடங்களும் உள்ளன. விண்ணப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 11,178 ஆகவும் உள்ளன. மேலும், மருத்துவ மாணவர்கள் மற்றும் பல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு நேற்று வரை விண்ணப்பங்கள் பெற பதிவு செய்தவர்கள் 21,183 ஆகவும், இதுவரை 12,429 பூர்த்தி செய்த விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.