• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவில் இடியுடன் கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!..

இலங்கை அருகே ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழையும் இடி மின்னலுடன் சூறைக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பிற்பகல் முதல் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம். குழித்துறை என மாவட்டம் முழுவதும் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.

மேலும் நாகர்கோவிலில் பெய்து வரும் மழையால் சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் சாலைகளில் செல்ல முடியாத அளவுக்கு இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.