தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலையில் தனி விமானம் மூலம் மதுரை வந்தவர், அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், காந்தி அரையாடை புரட்சி செய்த மதுரை மேலமாசி வீட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காந்தி ஜெயந்தி அன்று இந்த இடத்திற்கு வருகை தந்து மரியாதை செய்யும் முதல் முதலமைச்சரும் ஸ்டாலின் தான்.
இந்த காந்தியடிகள் அரையாடை புரட்சியை நிகழ்த்திய மேலமாசி வீதி என்பது 100 ஆண்டு வரலாறு சிறப்பை கொண்ட இடமாக பார்க்கப்படுகிறது.
மகாத்மா காந்தியடிகள் மதுரைக்கு இரண்டாவது முறையாக 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி
ஒத்துழையாமை இயக்கத்துடன், சுதேசி மற்றும் கதர் பரப்புரையை மேற்கொள்ள வந்தவர்,
மதுரை மேலமாசி வீதியில் இருந்த அவரது ஆதரவாளர் ராம் கல்யாண்ஜி என்பவருக்கு சொந்தமான 251 A என்ற எண் கொண்ட வீட்டில் தங்கினார்.
குஜராத் பாரம்பரிய உடையில் தலைப்பாகை, வேஷ்டி, சட்டை அணிந்து வந்திருந்த காந்தி,
மறுநாள் செப்டம்பர் 22 ஆம் தேதி காலை தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டு, வேஷ்டி மற்றும் ஒரு துண்டு மட்டும் அணிந்த படி தோன்றினார்.
கூலி தொழிலாளிகள், விவசாயிகளின் ஏழ்மையை உணர்த்தும் வகையில் தன்னுடைய உடையை மாற்றிக்கொள்ள நினைத்துக் கொண்டிருந்த காந்தி, மதுரையில் அந்த முடிவை செயல்படுத்தினார்.
குறிப்பாக நூற்றாண்டு வரலாற்று சிறப்புடைய இந்த மேலமாசி வீதியில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்த சிறப்பித்த முதல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் .