• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பீஸ்ட் ஹாலிவுட் படத்தின் தழுவலா?

Byமதி

Oct 2, 2021

பீஸ்டில் நடித்த துணை நடிகர் ஒருவர், இது ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவல் போலவும், யோகி பாபு நடிச்ச கூர்க்கா மாதிரியே பீஸ்ட் இருக்கு என்று தற்போது சர்ச்சையாகியுள்ளது.

பீஸ்டை இயக்கிவரும் நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா வீ ஆர் தி மில்லர்ஸ் படத்தின் தழுவல் என கூறப்பட்டது. தற்போது அது பெரியளவில் பேசு பொருளானது. இருப்பினும் தமிழுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை செய்து படமும் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

தற்போது, பீஸ்டில் நடித்த துணை நடிகர் ஒருவர், யோகி பாபு நடிச்ச கூர்க்கா மாதிரியே பீஸ்ட் இருக்கு என்று பொதுவில் புலம்பிய ஒரு வார்த்தை தற்போது சர்ச்சையாகியுள்ளது.

கூர்க்கா படமே மால் காப் என்ற படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுத்தது. பீஸ்டிலும் ஷாப்பிங் மால் செட்டில்தான் முக்கியமான காட்சிகளை எடுத்தனர். இதனை வைத்து பீஸ்ட் காப்பி என சொல்ல முடியுமா என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

மால் காப் ஒரு சிறிய ரசிகர்வட்டத்தை திருப்பிச் செய்யும் படம். நிச்சயம் அது பீஸ்டாக இருக்க வாய்ப்பில்லை. படம் வந்தால் உண்மை தெரிந்துவிடப் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.