• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்

Byவிஷா

Sep 21, 2022

முகத்தை அழகாக வைத்துக்கொள்ள:

பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சமமான அளவு எடுத்து மூன்றையும் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தினமும் கழுவி வந்தால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

கோதுமை தவிடுடன் பால் இரண்டையும் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து போகும்.
தக்காளி சாற்றில் சிறிதளவு ஜீனியை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பொலிவுடன் காணப்படும்.
தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்து அதனுடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.
முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் மூன்றையும் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினால், நல்ல பலன் கிடைக்கும்.