• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்

ByA.Tamilselvan

Sep 19, 2022

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தில் தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள துரைசாமி வரும் 21-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி அண்மையில் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.