• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

ரஷிய அதிபர் புதினுக்கு ஜோபைடன் எச்சரிக்கை

ByA.Tamilselvan

Sep 18, 2022

அணு ஆயுதம் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என ரஷிய அதிபர் புதினுக்கு ஜோபைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. சுமார் 7 மாதங்களாக போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வந்தன.
இந்தநிலையில் ரஷிய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “அணு ஆயுதம் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது 2-ம் உலக போருக்கு பிறகு போரின் முகத்தை மாற்றும். எனவே வேண்டாம். இதுபோன்ற ஆயுதங்களை பயன்படுத்தினால் அமெரிக்கா தக்க விளைவுகளை கொடுக்கும். அவர்கள் (ரஷியா) என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்து என்ன பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தீர்மானிக்கப்படும்” என்று கூறினார். இந்தநிலையில் உக்ரைனில் பல பகுதிகளில் உக்ரைன் படைகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. கெர்சன், கார்கிவ், டொனெட்ஸ்க், மைகோ லேவ் பகுதிகளில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.