• Fri. Apr 26th, 2024

அமெரிக்கப் படைகள் தைவானை பாதுகாக்கும் – அதிபர் ஜோ பைடன்

ByA.Tamilselvan

Sep 19, 2022

சீனாவிடமிருந்து தைவானை அமெரிக்க படைகள் பாதுகாக்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. சமீபத்தில் அமெரிக்க சபாநாயகர் தைவானுக்கு சென்றதால் ஆத்திரம் அடைந்த சீனா, தைவானை சுற்றி போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. தைவானுக்கு ராணுவ ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ரூ.8,700 கோடி மதிப்பில் ஆயுதங்களை தைவானுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் வழங்க அமெரிக்க பாராளுமன்றத்தை அதிபர் ஜோபைடன் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், சீனப் படையெடுப்பு ஏற்பட்டால் தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *