• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இன்னும் 12 நாட்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி இலவசம்

ByA.Tamilselvan

Sep 18, 2022

தமிழகம் முழுவதும் இன்று 37ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.மேலும் இன்னும் 12 நாட்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் 37ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது.சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறு வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இந்த சிறப்பு முகாம்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணை செலுத்த உள்ளவர்களும், 2ஆவது தவணை முடிந்து பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பின்படி வருகிற 30ஆம் தேதி வரை மட்டுமே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் தடுப்பூசிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும். 12 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் தகுதியுடைய அனைவரும், பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.