• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தூக்கில் தொங்கவிடப்பட்ட ஆ.ராசாவின் உருவபொம்மை

ByA.Tamilselvan

Sep 17, 2022

திருநெல்வேலியில், திமுக எம்பி ஆ.ராசாவின் உருவபொம்மையை தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரியார் திடலில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, இந்து மதம் சில கருத்துக்களை தெரிவித்தார். இந்து அமைப்புகள் ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டம், காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை, திருநெல்வேலி வி.எம்.சத்திரம் நான்கு வழிச்சாலை பாலத்தின் நடுவில் ஆ.ராசாவின் உருவபொம்மையை மர்ம நபர்கள் சிலர் தூக்கில் தொங்க விட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிந்ததும் வி.எம் சத்திரம் போலீசார் விரைந்து வந்து, உருவபொம்மையை அப்புறப்படுத்தினர்.உருவபொம்மையின் அருகில், ‘இந்து பெண்களை விபச்சாரி எனக் கூறிய திமுக எம்.பி ஆ ராசாவை தூக்கிலிடு; இந்து முன்னணி’ என்று எழுதப்பட்ட பதாகையும் கிடந்தது.
எனவே இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் தான் ஆ.ராசா உருவ பொம்மையை தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.