• Sun. Apr 28th, 2024

கேஸ் சிலிண்டர் விலை ரூ.750 தான்…!

ByA.Tamilselvan

Sep 16, 2022

குறைந்த விலையில் சிறிய கேஸ் சிலிண்டரை இண்டேன் (Indane) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இண்டேன் நிறுவனத்தின் குட்டி சிலிண்டரின் விலை 750 ரூபாய். காம்போசிட் கேஸ் சிலிண்டரான இண்டேன் குட்டி சிலிண்டர் சாதாரண சிலிண்டரை விட எடை குறைவானது. இதுமட்டுமல்லாமல், இந்த சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதமிருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த சிலிண்டரில் 10 கிலோ எடையுள்ள கேஸ் இருக்கும்.
சாதாரண சிலிண்டர் ஸ்டீலில் உருவாக்கப்படுவதால் எடை அதிகம். ஆனால் இந்த குட்டி சிலிண்டர் ஃபைபரில் உருவாக்கப்படுவதால் எடை மிகக் குறைவு. விலை சுமார் 750 ரூபாய் மட்டுமே. சிலிண்டர் தீர்ந்து போகப் போகிறதா என்பதை எளிதாக தெரிந்துகொள்ளலாம். பல அடுக்குகள் இருப்பதால் இந்த சிலிண்டர் பாதுகாப்பானதும் கூட. தற்போது சென்னை, மும்பை, டெல்லி உள்பட 28 நகரங்களில் இண்டேன் குட்டி சிலிண்டர் கிடைக்கிறது..
தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ கேஸ் சிலிண்டர் விலை 1000 ரூபாய்க்கு மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *