• Sat. Jul 25th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

பெரியாரின் 144வது பிறந்தநாளுக்கு டிடிவி தினகரன் மரியாதை

Byகாயத்ரி

Sep 14, 2022

தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளையொட்டி டிடிவி தினகரன் மரியாதை செலுத்தவுள்ளார்.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகுத்தறிவு பகலவன், சுயமரியாதை சுடரொளி, திராவிட இயக்கத்தின் பெருந்தலைவர் தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள் செப்டம்பர் 17 சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 10 மணிக்கு சென்னை, அண்ணா சாலையில், அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இந்நிகழ்வில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் என அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.