• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

வானில் தோன்றிய மர்ம விளக்குகள்… உத்தர பிரதேச மக்கள் அதிர்ச்சி…

Byகாயத்ரி

Sep 14, 2022

உத்தர பிரதேச நகரங்களில் உள்ள சில பகுதிகளில் கடந்த திங்கள் கிழமை இரவு வானில் மர்மமான விளக்குகள் தோன்றியதாக கான்பூர், லக்னோ மக்கள் பார்த்து குழப்பம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோக்களை அந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்களுடைய சமூக வலைதளபக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த விளக்குகள் ரயில்பெட்டி போல் நகர்வதாக தெரிவிக்கின்றனர். அவை Unidentified Flying Object எனும் கண்டறியப்படாத பறக்கும் பொருள்களாக இருக்கலாம் என பலரும் பல விதமான கருத்துகளை கூறி வருகின்றனர். சிலர் நாசா, இஸ்ரோ ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றை டேக் செய்து இந்த விளக்குகள் தொடர்பான கேள்வியை கேட்டுள்ளனர். ஆனால், இது சமீபத்தில் ஏவப்பட்ட செயற்கைக்கோளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.