• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கருவுறுதல் பிரச்சனைக்கு தீர்வு? புதிய புரதம் கண்டுபிடிப்பு

ByA.Tamilselvan

Sep 12, 2022

கருவுறுதல் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புதிய புரதம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கருவுறுதல் ஏற்படும் பிரச்சனை காரணமாக பலரும் குழந்தைபாக்கியம் இன்றி அவதிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகை ஏற்பட்டுள்ளது. விந்தணு, கருமுட்டை இணைவின்போது முக்கிய பங்கு வகிக்கும் புரதத்தை விஞ்ஞானிகள் முதல்முறையாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்க்க உதவும் என்று கருதப்படுகிறது. மேலும் இந்த கண்டுபிடிப்பு சிறந்த கருத்தடை சாதனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த புதிய புரதத்திற்கு கிரைக்க தாய்மைக் கடவுளான மியாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.