• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இபிஎஸ் பொதுச்செயலாளராக பதவியேற்றதை கொண்டாடும் விதமாக நிர்வாகிகளுக்கு விருந்து

ByA.Tamilselvan

Sep 12, 2022

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்டதை கொண்டாடும் விதமாக கழுகுமலையில் அதிமுக நகர இளைஞரணி செயலாளர் கழுகுமலை கருப்பசாமி அதிமுக நிர்வாகிகளுக்கு கரட்டுமலையில் அசைவ விருந்து அளித்து உபசரித்தார். இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்எல்ஏ வுமான கடம்பூர் ராஜீ கலந்து கொண்டு கழுகுமலை அருகே உள்ள கரட்டுமலையில் அமைந்திருக்கும் ஸ்ரீ மருதுடையார் தர்மசாஸ்தா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்குள்ள மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கு நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி அசைவ விருந்து அளித்தார்.
இதில் அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், மாவட்ட அம்மா பேரவை அவைத்தலைவர் மாரியப்பன், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் காமராஜ், எம்ஜிஆர் மன்றம் சார்பில் நவநீதகிருஷ்ணன், நகர செயலாளர் ஆபிரகாம், கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலர் கவியரசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, கிளை செயலாளர்கள் பாலமுருகன், நாகராஜ், கழுகுமலை வார்டு செயலாளர்கள் மாரியப்பன், செந்தூர்பாண்டியன், செந்தில்குமார் மற்றும் மெக்கானிக் குருநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர் அதிமுக நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நலமுடன் வாழ வேண்டியும், அதிமுக நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியும் வேண்டிக்கொண்டு கரட்டுமலை ஸ்ரீ மருதுடையார் தர்மசாஸ்தா கோயிலில் மொட்டையடித்து சிறப்பு வழிபாடு நடத்தினார். திரளான பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.