• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Sep 8, 2022

பாசிப்பருப்பு பாயாசம்:

தேவையான பொருட்கள்
பாசி பருப்பு – 1 கப், பச்சரிசி மாவு – 2 ஸ்பூன், வெல்லம் – 1 கப் (துருவியது), நெய் – 1ஃ4 கப், முந்திரி – 10, உலந்த திராட்சை – 10, ஏலக்காய் – 3 (நசுக்கியது), தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
செய்முறை
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்த பின் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். (பாசிப்பருப்பு வேகும் வரை தேவையான அளவு தண்ணீர் சேர்க்கலாம்). வெந்த பருப்பை நன்கு மசித்து விடவும். நன்றாக வெந்தபின் பச்சரிசி மாவு தண்ணீர் விட்டு கலக்கி பருப்பு கலவையில் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கவும்.
வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் எடுத்து வேகவைத்த பருப்பில் வடிகட்டி ஊற்றவும். பருப்புடன் ஏலக்காய், வெல்லத்தை சேர்த்ததும் நன்கு கிளறி விட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து பருப்பு கலவையில் கொட்டவும். தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கி பரிமாறலாம். சுவையான பாசிப்பருப்பு பாயாசம் தயார்.