• Tue. Apr 30th, 2024

க. மயிலாடும்பாறை ஒன்றிய குழுத் தலைவராக திமுக கவுன்சிலர் சித்ரா போட்டியின்றி தேர்வு.

கடமலை-மயிலை ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று மயிலாடும்பாறை யூனியன் அலுவலகத்தில் காலை 10.30 மணி அளவில் நடந்தது. 14 வதுவார்டு கவுன்சிலர் சித்ரா சுரேஷ் தலைமையில் 11 திமுக கவுன்சிலர்களும், அதிமுக சார்பில் 2 கவுன்சிலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் தி.மு.க 14வது வார்டு கவுன்சிலர் சித்ராசுரேஸ் ஒன்றியக்குழுத் தலைவருக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து மற்றவர்கள் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால் சித்ராசுரேஷ் ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் நடந்த துணைத் தலைவருக்கான தேர்தலில் தி.மு.க 3 வது வார்டு கவுன்சிலர் சேகரன், 10 வார்டு கவுன்சிலர் ஆயுதவள்ளி மணிமாறன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். கவுன்சிலர் சேகரன் இரண்டு பேருடைய வேட்பு மனுவினை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து கிழித்து எரிந்தார். இதனை தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சினை காரணமாக தேர்தல் மறு தேதி குறிப்பிடாமல் தேர்தல் அதிகாரி தாமரைக்கண்ணன் ஒத்தி வைத்தார். ஒன்றிய குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட சித்ராசுரேஸ்க்கு ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மாகராஜன், ஆனணயாளர்கள் திருப்பதிமுத்து, திருப்பதிவாசன், தி.மு.க ஒன்றிய கழக செயலாளர்கள் வழக்கறிஞர் சுப்பிரமணி, தங்கப் பாண்டி , முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் தமிழரசன், தேசிங்கு ராஜன் ,தேனி மாவட்ட பொறுப்பு குழுஉறுப்பினர் ஜெயபால், மாவட்ட பிரதிநிதி மொக்கராஜ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாடசாமி, தெய்வம், மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி ராம லிங்கம், கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் சரவணன்,
சார்பு ஆய்வாளர்கள் அருண்பாண்டி, கருப்பையா, தலைமையில் 70 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *