• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோயம்பேட்டில் பேருந்து தீடிரென பற்றி எரிந்தது பரபரப்பு

Byமதி

Sep 29, 2021

எப்போதும் சென்னையில் பரபரப்பாக உள்ள பகுதிகளில் ஒன்று கோயம்பேடு. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் மக்கள் கூடும் இடம்.

இன்று சற்றும் எதிர்பாராத வகையில், கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்து புகை வந்த போது பயணிகள் வெளியேறிவிட்டனர். அதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

உடனே இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென தீ பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.