சிவப்பரிசி அவல் : 1 கப், நறுக்கிய வெங்காயம் : 1 கப், கடலை மாவு : 1 கப், அரிசி மாவு : 1 கப், தேங்காய் : 1 மூடி, மிளகாய் வத்தல் : 5, தக்காளி : 1, மிளகாய்த் தூள் : சிறிது, கறிவேப்பிலை, கொத்தமல்லி : சிறிது, சோம்பு, சீரகம் : தாளிக்க, உப்பு, எண்ணெய் : தேவையான அளவு
செய்முறை:
நாம் எப்பொழுதும் செய்வதுபோல் பொங்கல் செய்து கொள்ளவும். வெந்த பொங்கலுடன், சிவப்பரிசி அவலைக் கலந்தால் உடனே இறுகிவிடும். அத்துடன் வெங்காயம், மிளகாய்த் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும். கடலைமாவு, அரிசி மாவுடன் உப்பு, மிளகாய்த் தூள் கலந்து, சிறிது நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைக்கவும். அதில் உருண்டைகளைத் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.
கிரேவி செய்ய தேங்காய், சோம்பு, மிளகாய் வத்தல், உப்பு, தக்காளி சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். பொரித்த கோப்தாக்களை கிரேவியில் போட்டு ஊறவிட்டுப் பரிமாறவும்.
சமையல் குறிப்புகள்:
