• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீமதியின் மரணம் கொலையோ, பாலியல் வன்கொடுமையோ இல்லை-மேல் முறையீடு செய்ய முடிவு…

ByA.Tamilselvan

Aug 30, 2022

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையோ, வன்கொடுமையோ செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை சென்னை உயர்நீதிமன்றம் தகவல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. மாணவி ஸ்ரீமதியின் மரணம் கொலை தொடர்பாக, கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அந்த தீர்ப்பில், மாணவி ஸ்ரீமதியின் மரணம், கொலை என்பதற்கான ஆதாரம் இல்லை எனவும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் கூறியது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட, ஸ்ரீமதியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர். பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.