• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

சிம்பு ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்

Byமதி

Sep 28, 2021

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிம்பு. கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி , டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில், தற்போது படத்தின் டிரைலரை காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடயுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.