அமெரிக்கன் வெஜ் பால்ஸ்
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு 3, பீன்ஸ் 8, கேரட் 1, பெரிய வெங்காயம் 1,
பொடியாக நறுக்கிய ஆப்பிள் தேவைக்கேற்ப வெள்ளரிக்காய் மற்றும் லெட்டூஸ் இலை தலா 1 டீஸ்பூன், பொடியாக உடைத்த முந்திரிப்பருப்பு 1 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் 50 கிராம், மிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள், கரம் மசாலாதூள் தலா 1 டீஸ்பூன்
பிரெட் தூள் 100 கிராம், எண்ணெய் பொரிப்பதற்கு, உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோல் நீக்கி, மசித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் காய வைத்து, மெலிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய கேரட், பீன்ஸ், சேர்த்து வதக்கவும். கொடுத்துள்ள அளவில் பாதியளவு மிளகாய் தூள், தனியாதூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து இன்னும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி அடுப்பை அணைக்கவும்.
அத்துடன் ஆப்பிள், வெள்ளரி, லெட்டூஸ் மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். கார்ன்ஃப்ளாரில், மீதமுள்ள மிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்து, அளவாக தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். தயாராக உள்ள உருண்டைகளை இந்த மாவில் முக்கி, பிரெட் தூளில் பிரட்டி எடுத்து சூடான எணணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுத்து, சாஸ் உடன் பரிமாறவும். இப்போது சூடான அமெரிக்கன் வெஜ் பால்ஸ் ரெடி.