• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுக் கடைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது-அமைச்சர் அன்பில் மகேஷ்

ByA.Tamilselvan

Aug 20, 2022

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மதுக் கடைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழகம் முழுவதும், அரசுப் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மதுக் கடைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இது குறித்த புகார்கள் வந்த போது, துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகள் தொடர்பாக புகார்கள் வரும் பட்சத்தில், அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.