• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மூன்று பாகங்களாக நீளும் லூசிபர்!

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் 2019 ஆம் ஆண்டுவெளியான படம் லூசிபர். நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தின் மூலம் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகி வணிகரீதியாக வெற்றிபெற்றார்
இதைத்தொடர்ந்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற பெயரில் மீண்டும் மோகன்லாலை வைத்து படம் இயக்க போவதாக 2021ஆம் ஆண்டு அறிவித்தார் பிரித்விராஜ். இதன் படப்பிடிப்பு இந்த வருடம் துவங்க உள்ளதுஇந்த நிலையில் நேற்று மலையாள சிறப்பு நாளான சிங்கம் மாதம் முதல் தேதியை முன்னிட்டு மோகன்லால், பிரித்விராஜ், லூசிபர் கதாசிரியர் முரளி கோபி மற்றும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் ஆகிய நால்வரும் ஒன்றுகூடி லூசிபர் இரண்டாம் பாகம் குறித்த கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். நால்வரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர் லூசிபர் இரண்டாம் பாகம் குறித்து கதாசிரியர் முரளிகோபி கூறும்போது, “இது லூசிபர் படத்தின் சீக்வல் அல்ல.. மூன்று பாகங்களைக் கொண்ட லூசிபர் படத்தின் இரண்டாவது பாகமாக இது வெளியாகிறது.. மூன்றாம் பாகத்துடன் இது முடியும்”. என்று கூறியுள்ளார். இதன் மூலம் இந்த படத்திற்கு மூன்றாம் பாகமும் இருக்கிறது என்பதை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார் கதாசிரியர் முரளி கோபி.