• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஐகோர்ட்டு கூறியதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்- ஜெயக்குமார்…

ByA.Tamilselvan

Aug 17, 2022

பொதுக்குழு செல்லாது என ஜகோர்ட் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேச்சு.
ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும் போது
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஐகோர்ட்டு இன்று அளித்துள்ள தீர்ப்பு கிடைத்துள்ளது. சட்டரீதியாக இதனை எதிர் கொள்வோம். பொதுக்குழுதான் சர்வ அதிகாரம் படைத்தது. ஐகோர்ட்டு பிறப்பித்தள்ள உத்தரவில் ஆணையர் ஒரு வரை நியமித்து பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஐகோர்ட்டு கூறியதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதுபற்றி அதிகம் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி தீர்ப்பு விவரங்கள் முழுமையாக கிடைத்த பின்னர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.