• Mon. Apr 29th, 2024

நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

கடந்த செப்ட்பர் 12ஆம் தேதி நாடு முதுவதும் நீட் தேர்வுகள் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து பல லட்ச மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் மட்டும் 1,10,971 பேர் இந்த தேர்வினை எழுதினர். கலந்துகொண்ட மாணவர்களில் பலர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம்
என கருதப்பட்டது. எனவே தமிழக அரசு 333 மன நல மருத்துவர்களையும், மனநல ஆலோசகர்களையும் நியமித்து, மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அதில் சுமார் 200 மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. இந்த தகவலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *