• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

புதிய போஸ்டருடன் சலார் வெளியீட்டு தேதி அறிவிப்பு

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘சலார்’. ஹோம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ‘கே ஜி எஃப்’ பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில்பிரபாஸ் நடிப்பில் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் ‘சலார்’ திரைப்படம் செப்டம்பர் 28, 2023 ஆம் ஆண்டில் வெளியாகவிருக்கிறது. முழு நீள ஆக்சன் படமான ‘சலார்’ படத்தின் முதல் பார்வைவெளியாகி, பெரும் தாக்கத்தையும், நேர்மறையான அதிர்வையும் ஏற்படுத்தி இருந்தது

‘சலார்’ படத்தில் பிரபாஸின் கதாபாத்திர தோற்றப் புகைப்படத்தை காண்பதற்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்தார்கள். ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, உடன் படத்தின் வெளியீட்டு தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

‘சலார்’ திரைப்படம் – இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படமாக தயாராகி வருகிறதுஇந்த படத்தின் முதற் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இப்படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் என்பதால், இதற்காக வெளிநாட்டு நிறுவனங்களை வாடகைக்கு தயாரிப்பு நிறுவனம் அமர்த்தியுள்ளது

‘கே ஜி எஃப்’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு பிறகு அப்படத்தினை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல், சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளார்

.

அத்துடன் பன்மொழிஇந்திய படத்தை இயக்கி வணிகரீதியாக வெற்றிபெற்ற இயக்குநர்என்ற அடையாளமும் கிடைத்துள்ளது இதன் காரணமாக ‘சலார்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு,அதிகரித்து வருகிறது.பாகுபலி, ராதேஷ்யாம் படங்கள் மூலம் பன்மொழி படங்களின் நாயகனாக இந்திய சினிமாவில் பார்க்கப்படும்
பிரபாஸ் நடிப்பில், எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படங்களில் சலாரும் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், ஜெகபதிபாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே ஜி எஃப்’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் அடுத்த ஆண்டில் சலாரை வெளியிட தயாராகி வருகிறது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று ‘சலார்’ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.