
மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று கிராம சபை கூட்டம் நடத்திய மகாராஜாபுரம் ஊராட்சி நிர்வாகம்.மலைப் பகுதியில் மாடு மேய்க்க அனுமதிக்க வேண்டும்,அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றம்.
நாடு முழுவதும் இன்று 75 வது சுதந்திர தினம் வெகு வமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது . சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் மகாராஜபுரம் ஊராட்சி சார்பில் மலைவாழ் மக்களின் கோரிக்கையை கேட்பதற்காக தாணிப்பாறை ராம்நகர் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முதலில் மலைவாழ் மக்கள் சார்பாக மலைகளில் மாடுகளை மேய்ப்பதற்கு தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும், தங்கள் பகுதிக்கு விரைவில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும், சாக்கடை அள்ளும் பணியை மேற்கொள்ள வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில் அந்த கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது .மேலும் மகாராஜபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள 9 வார்டு பொதுமக்களும் சாலை,குடிநீர், சுகாதார வளாகம், வாருகால் வசதி, சுகாதார பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரிக்கையாக முன் வைத்தனர். பின்னர் அனைவரின் கோரிக்கையும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
