• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சுதந்திரதினவிழா கொண்டாட்டம்

Byகுமார்

Aug 15, 2022

மதுரையில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேசிய கொடியேற்றி சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை சக்கிமங்கலம் அன்னை சத்யா நகரில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் மற்றும் ஜாகிர்உசேன் .அக்பர் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர்.அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை சிலைமான்காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மோகன் சக்கிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் நூர்முகமதுஆகியோர் நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள்