• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டம்.. தொடங்கி வைக்கிறார் துணைநிலை ஆளுநர் தமிழிசை

Byகாயத்ரி

Aug 10, 2022

இன்று புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டம் நடைபெற உள்ளதை அடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. புதுச்சேரியில் 2022 – 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குவதால் சட்டமன்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார் என்பதும், முதல்வர் பதவி ஏற்ற பின்னர் பிரதமர் மோடியை முதல் முதலாக சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமரை சந்தித்து வந்த பின்னர் புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க இருப்பதை அறிந்து மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்த திட்டங்கள் பல அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.