• Thu. Oct 22nd, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே இடி மின்னலுடன் கூடிய பெய்த கனமழையால் மின்னல் தாக்கி இரண்டு பசு மாடுகள் பலி..,

ByP.Thangapandi

Oct 22, 2026

வடகிழக்கு பருவமடையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.,

இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்த சின்னன்- பழனியம்மாள் தம்பதியினர் வில்லாணி கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் சுமார் 10 பசு மாடுகளை வளர்த்து பராமரித்து வருவதாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் நேற்று இரவு பெய்த இடி மின்னலுடன் கூடிய கனமழையால் வேப்பமரத்தின் அடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகள் மீது திடீரென மின்னல் தாக்கியதில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பசு மாடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,

இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,