• Thu. Oct 22nd, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 67 மில்லி மீட்டர் மழை பதிவு..,

ByP.Thangapandi

Oct 22, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான உத்தப்பநாயக்கனூர், வெள்ளைமலைபட்டி, சீமானூத்து, செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கனூர், நக்கலப்பட்டி, குப்பணம்பட்டி, செல்லம்பட்டி, தி.விலக்கு, சேடப்பட்டி, அல்லிகுண்டம், எழுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.,

இதில் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 67.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது., இதனால் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஓடைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.,

இந்த கன மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.,