• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சூர்யா சிறுத்தை சிவா இணையும் புதிய படம்

Byகுமார்

Sep 21, 2021

சிறுத்தை சிவா தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியையொட்டி ‘அண்ணாத்த’ வெளியாக உள்ளது.

அதேசமயம், சூர்யா தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது குற்றாலம் மற்றும் தென்காசி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் அடுத்த படத்தில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் சிவா மும்மரமாக ஈடுபட்டு வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாவதாக இருந்த ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.