• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சமத்துவபுரம் வீடுகளுக்கு தகுதியுள்ள பயனாளிகள் வரவேற்கப்படுகிறார்கள்..,
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை..!

Byவிஷா

Jul 26, 2022

விருதுநகர் மாவட்டத்தில், சமத்துவபுரம் வீடுகளுக்கு தகுதியுள்ள பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் கீழ்கண்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சமத்துவபுரங்களில் அரசாணை எண் 44 மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை (SGS-1) நாள்: 28.03.2022. மற்றும் அரசாணை எண் 71 மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை (SGS-1) நாள்: 13.06.2022. -ன் படி தகுதியற்ற பயனாளிகளுக்குப் பதிலாக புதிய பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இனங்களின் அடிப்படையில் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன் விவரம் பின்வருமாறு: சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், முள்ளிச்செவல் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் ஆதிதிராவிடர் பிரிவில் 3 வீடுகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவில் 5 வீடுகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 1 வீடு என மொத்தம் 9 வீடுகள், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், செங்கோட்டை ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவில் 1 வீடு மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் ஆதிதிராவிடர் பிரிவில் 5 வீடுகள், இதர பிரிவில் 19 வீடுகள், என மொத்தம் 24 வீடுகள்.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் 34 வீடுகளுக்கு தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சமத்துவபுர வீடுகள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தினை அணுகி பெற்றுக்கொள்ளவும். விண்ணப்பங்களை அலுவலக நேரத்தில் 05.08.2022- தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.