• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

ஊரக உள்ளாட்சி தேர்தல்: திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக, வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி, விருப்ப மனு தாக்கல் செய்வது, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது போன்ற பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்நிலையில் திமுகவின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ளார். அதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய குழு வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.