• Thu. Mar 23rd, 2023

பள்ளிகளில் தொடர்ந்து பரவும் கொரோனா

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஆரம்பம் முதலே பலவேறு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் ஒருசில பள்ளிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுவருகிறது.

இந்தநிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை அரசு பள்ளி மாணவர்கள் 52 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

கொரோனாவாக இருக்குமோ என்ற அச்சத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பள்ளி முடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12- ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பள்ளிக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *